தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
வைகோ
வைகோ
Published on

சென்னை:

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மெர்சியா (30), நாகராஜ் (52), சாம்சன் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் தங்கள் கப்பல் மூலம், தமிழக மீனவர்களின் படகின் மீது மோதினர். இதில் நிலைதடுமாறிய மீனவர்கள் 4 பேரும் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்தது. இலங்கை கடற்படையினரின் இந்த வெறிச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார். 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றதாக குற்றம் சாட்டி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com