மத்தூர் அருகே தொழிலாளி திடீர் மரணம்

மத்தூர் அருகே தொழிலாளி திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள தர்மன்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அண்ணாமலை திடீரென இறந்து விட்டார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com