

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிலிப்ஸ் என்ற குலாம் முஹம்மத். மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்திச் செல்லும் நோக்கத்தில் இவருக்குச் சொந்தமான வீட்டில் பதுக்கி இருப்பதாக மண்டபம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மண்டபம் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் தலைமையில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்கு அவித்து வைக்கப்பட்டிருந்த 113 கிலோ கடல் அட்டை, உயிருடன் இருந்த 138 கிலோ கடல் அட்டையை மொத்தம் 251 கிலோ கடல் அட்டை கைப்பற்றினர். இது தொடர்பாக மண்டபம் போலீசார் குலாம் முகம்மது, அவரது மனைவி ஆயிஷா ராணி ஆகியோர் மீது வழக் குப்பதிவு செய்து குலாம் முகம்மதை கைது செய்தனர்.