12 பாஜக எம்எல்ஏக்களை ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்

சட்டசபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபைக் கூட்டம்
சட்டசபைக் கூட்டம்
Published on

மும்பை:

மகாராஷ்டிர சட்டபையில் பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. சபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அவதூறான வார்த்தைகளால் பேசியதுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி பாஸ்கர் ஜாதவ் கேட்டுக்கொண்டும், உறுப்பினர்கள் அமைதியடையவில்லை.

இதனையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com