மதுக்கரை அருகே மினி வேனில் மது விற்ற வாலிபர் கைது

மதுக்கரை அருகே மினி வேனில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

செட்டிபாளையம்:

கோவை மதுக்கரை பச்சாபாளையம் பாலத்துறை ரோட்டில் மதுக்கரை போலீசார் நேற்று இரவு ரோந்து பணி ஈடுப்பட்டனர். அப்போது பாலத்துறை ரோடு நேசர் பாலம் அருகே நின்றிருந்த மினி வேன் ஒன்று போலீசார் கண்டதும் அங்கிருந்து கிளம்பியது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி மற்றும் போலீசார் மினி வேனை விரட்டி பிடித்தனர். பின்னர் உள்ளே சோதனை செய்த போது அதில் கர்நாடக மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மினி வேனை ஓட்டி வந்த மதுக்கரை பாலத்துறையை சேர்ந்த பிரேம்குமார் (வயது 29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மினி வேனில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். பின்னர் வாகனத்தில் வைத்திருந்த 16 கர்நாடக மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com