சேலம் அருகே லாரி மோதி போலீஸ்காரர் பலி

சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து
விபத்து
Published on

சேலம்:

சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 30). இவர் சேலம் மாநகர போலீசில் மோப்பநாய் பிரிவில் பணியாற்றி வந்தார். வரதராஜன் நேற்று இரவு பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். குள்ளம்பட்டி பனந்தோப்பு பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வரதராஜன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com