விபத்து
செய்திகள்
சேலம் உடையாப்பட்டியில் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி
சேலம் உடையாப்பட்டியில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி எம்.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55), எலக்ட்ரீசியன். இவர் நேற்று இரவு மொபட்டில் சேலம் உடையாப்பட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது தர்மபுரியில் இருந்து அறந்தாங்கிக்கு செங்கல் பாரம் ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
இதில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

