கொச்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பிரச்சனை, பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளர் வேணுகோபால் தெரிவித்தார்.
மேயர் வேட்பாளர் வேணுகோபால்
மேயர் வேட்பாளர் வேணுகோபால்
Published on

கொச்சி:

கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றனர். மதியம் வெற்றி நிலவரங்கள் வெளியாகத் தொடங்கின. 

இந்நிலையில் கொச்சி மாநகராட்சியில், காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளர் என்.வேணுகோபால், வடக்கு தீவு வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்து வேணுகோபால் கூறுகையில், ‘என்ன நடந்தது என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். வாக்களிக்கும் இயந்திரத்தில் உள்ள பிரச்சனை தொடர்பாக நீதிமன்றம் செல்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. என்ன நடந்தது என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com