நீட் தேர்வை எதிர்த்து கி.வீரமணி பிரசார பயணம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய பெருநகரங்களில் அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரசாரப் பயணம் கூட்டம் நடைபெற்றது.
கி.வீரமணி
கி.வீரமணி
Published on

சென்னை:

திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’டிலிருந்து விலக்குக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மாநாடுகள் நடத்துவதெனவும், மக்கள் எழுச்சிப் போராட்டங்களை மேற்கொள்வது என்றும், 21.9.2021 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய பெருநகரங்களில் அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரசாரப் பயணம் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெறும் பிரசாரப் பயணக் கூட்ட விவரம் வருமாறு 17.10.2021 (காலை) வேலூர், 18.10.2021 (மாலை) ராஜபாளையம், 19.10.2021 (மாலை) திண்டுக்கல், 20.10.2021 (மாலை) நாகப்பட்டினம், 21.10.2021 (மாலை) செந்துறை என இப்பிரசாரப் பயணக் கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com