கண்ணமங்கலம் அருகே சீரமைப்பு பணியின்போது மின்கம்பம் சாய்ந்து ஊழியர் பலி

கண்ணமங்கலம் அருகே சீரமைப்பு பணியின்போது மின்கம்பம் சாய்ந்து ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள ராமச்சந்திரபுரம் கொல்லமேட்டை சேர்ந்த சங்கர் மகன் ஹேமச்சந்திரன் என்ற நவீன் (வயது 20). இவர் மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலைசெய்து வந்தார். நேற்று மாலை கண்ணமங்கலம்- ரெட்டிபாளையம் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை ஹேமசந்திரன் சரி செய்யும்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் சாய்ந்து அவர் மீது விழுந்தது. அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது ஹேமசந்திரன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com