கண்ணமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

கண்ணமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), கூலி தொழிலாளி. இவரது ஸ்கூட்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு போனது. இதுசம்பந்தமாக கண்ணமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒண்ணுபுரம் கிராமத்தில் முருகேசனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஓட்டிச்சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுப்பேட்டை பகுதியில் திருடப்பட்ட முருகேசனின் ஸ்கூட்டரில் வந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் செய்யாறு அருகே திருப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (46) என்பது தெரிய வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com