கள்ளக்குறிச்சியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

கள்ளக்குறிச்சியில் மாற்றுக்கட்சியினர் 1,289 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு துண்டு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
Published on

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் இந்திலி, மாடூர் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 1,289 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு துண்டு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசும்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோன்றிய காலத்தில் இருந்து இதுவரை இல்லாத ஒரு வெற்றியை காணப்போகின்றது. இதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கப்போகிறீர்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழியன் சத்தியமுர்த்தி, கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்பராயலு, முன்னாள் எம்.எல்.ஏ.மூக்கப்பன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, காமராஜ், லியாகத்அலி, எத்திராஜ், கோவிந்தராஜ், சேகர், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com