ஏ.டி.எம்.மில் இருந்த பேட்டரியை திருடியவர் கைது

ஏ.டி.எம்.மில் இருந்த பேட்டரியை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றனர். பின்னர், ஏ.டி.எம். எந்திரத்தின் உள்ளே இருந்த அறையின் பூட்டை உடைத்து அதில் இருந்த 3 பேட்டரிகள் மற்றும் யூ.பி.எஸ்.சை திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், திருவள்ளூரை அடுத்த வடமதுரையை சேர்ந்த பிரசாந்த் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த பேட்டரிகள் மற்றும் யூ.பி.எஸ். போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய கேசவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com