கபிஸ்தலம் அருகே 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய ராஜதுரை, வினோத் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு திருச்சி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே ஈச்சங்குடி கிராமத்தை சேர்ந்த பாலன் (வயது 50) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே தெருவை சேர்ந்த ராஜதுரை (32) மற்றும் அவரது நண்பர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வினோத் (31) ஆகியோர் சேர்ந்து காரில் கடத்தி திருவையாறு அருகே உள்ள சிறுபுலியூர் என்னும் கிராமத்தில் கொலை செய்து போட்டுவிட்டனர்.

இந்த வழக்கில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப்பதிவு செய்து இருவர் உள்பட அவரது உறவினர்களை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர்சஞ்சய் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கினார். அதன்படி கொலை வழக்கில் தொடர்புடைய ராஜதுரை, வினோத் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு திருச்சி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com