ஜான்பாண்டியன் பொங்கல் வாழ்த்து

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜான்பாண்டியன்
ஜான்பாண்டியன்
Published on

நெல்லை:

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தைத்திருநாளில் உழவுத்தொழில் செய்வோரை தாழ்ந்தவன் என்று சொல்லும் நிலை மாறி உயர்வுக்கான வழி பிறக்க வேண்டும். பயிர் செய்து அதனை அறுவடை செய்து பெரும் விளைச்சலை கண்டவுடன் மனதில் பொங்கி வரும் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், அதற்கு காரணமான இயற்கைக்கு பொங்கலிட்டு வழிபட்டு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. 

உழவுத்தொழில் செய்வோருக்கு உயர்வை கொண்டு சேர்ப்போம் என்று தமிழ்ச்சமூகம் இந்த தை திருநாளில் உறுதி ஏற்க வேண்டும். பூர்வகுடி விவசாய சமூகமாக தேவேந்திர குல வேளாளர் சமூகம் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க அரசாணை கேட்டு போராடி வருகிறார்கள். நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்று உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள். அனைத்து தமிழ் சமூக உறவுகளுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com