தனிஷ் சித்திக்
தனிஷ் சித்திக்

தலிபான் தாக்குதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான்களுக்கும் இடையே அதிகளவில் மோதல்கள் நடந்து வருகின்றன.
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் மரணம் அடைந்துள்ளார்.

காந்தகாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்த தனிஷ் சித்திக், தனது திறமைக்கு சான்றாக உயரிய புலிட்சர் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com