நான் நல்ல பாம்பு... பாஜகவில் இணைந்ததும் பஞ்ச் டயலாக் பேசிய நடிகர்

மேற்கு வங்காளத்தில் இன்று பாஜகவில் இணைந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, தனது விருப்பத்தை நிறைவேற்ற பாஜக தனக்கு வாய்ப்பை வழங்கியிருப்பதாக கூறினார்.
மிதுன் சக்கரவர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பியும், நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்தார். அவரை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மாநில தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பேசுகையில், தனது விருப்பத்தை நிறைவேற்ற பாஜக தனக்கு வாய்ப்பை வழங்கியிருப்பதாக கூறினார். அத்துடன், அவர் ஒரு திரைப்படத்தில் பேசிய பஞ்ச் டயலாக்கை பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

‘நான் பெங்காலி என்பதில் பெருமைப்படுகிறேன். எனது படத்தில் நான் பேசிய பஞ்ச் டயலாக்குகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் ஒரு நல்ல பாம்பு. ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவன். இப்போது புதிய ஸ்லோகத்தை நினைவில் கொள்ளுங்கள்... ஒரே கடியில் நீ புகைப்படமாக மாறிவிடுவாய்’ என்றார் மிதுன் சக்கரவர்த்தி. அவரது பஞ்ச் டயலாக்கை கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com