உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 50 தி.மு.க.வினர் கைது

இளையான்குடி அருகே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 50 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

இளையான்குடி:

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசன் தலைமையில் 50 பேர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 50 பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com