கூத்தாநல்லூரில் பலத்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூரில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தினமும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. மதியம் 2 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

அதனை தொடர்ந்து கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கூத்தாநல்லூர் பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதால் கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com