

சென்னை:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 20-ந் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 75 டிகிரியாகவும் காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.