குடியாத்தம் தபால் அலுவலகத்தில் ஊழியர் மர்ம மரணம்

குடியாத்தம் தபால் அலுவலகத்தில் ஊழியர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

குடியாத்தம்:

குடியாத்தத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 53). குடியாத்தம் தலைமை தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலையில் வீட்டிலிருந்து இரவு பணிக்கு விஜயகுமார் சென்றுள்ளார். நேற்று காலையில் அவரது மனைவி மீரா, விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இதுகுறித்து தபால் அலுவலகம் அருகே வசிக்கும் தெரிந்த நபருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் சென்று பார்த்தபோது அறையின் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு விஜயகுமார் தூங்கிய நிலையில் இருந்துள்ளார். கதவை தட்டியும் எழுந்திரிக்கவில்லை.

இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூங்கிய நிலையில் விஜயகுமார் இறந்துள்ளார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் மீரா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சென்று விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com