குடியாத்தம் அருகே அண்ணன் தம்பியை தாக்கிய 3 பேர் கைது

குடியாத்தம் அருகே அண்ணன் தம்பியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 32), மெக்கானிக், இவரது தம்பி சரவணன் (29), லாரி டிரைவர். கடந்த தீபாவளியன்று இவர்கள் வீட்டிற்கு அருகே வசிக்கும் பிரபாகரன் (33) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அந்த பட்டாசுகள் சுந்தரராஜன் வீட்டில் போய் விழுந்துள்ளது, இதனால் சுந்தரராஜன் தரப்பிற்கும் பிரபாகரன் தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன் தரப்பினர் சுந்தர்ராஜன் மற்றும் சரவணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் சுந்தர்ராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், அவரது தம்பி புஷ்பராஜ் (21), இவர்களின் உறவினர் ஹேமநாதன் (30) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com