உறவினர் கொரோனாவால் பாதிப்பு: தொற்று பயத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

பாளையங்கோட்டை அருகே உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் தனக்கும் தொற்று இருக்குமோ? என்ற பயத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் மேலூரைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி கோமதி (வயது 74). இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கோமதியின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் கோமதி தனக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்று அஞ்சினார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டில் கோமதி திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மதியம் கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com