ஜனவரி 1 முதல் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி - மத்திய அரசு

அனைத்து வகையான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்வதற்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வெங்காயம்
வெங்காயம்
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட பொதுமுடக்கம், தென்மேற்கு பருவமழை ஆகியவற்றால் இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்தது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

இந்நிலையில், அனைத்து வகையான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்வதற்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com