அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஜூன் 20-க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஜூன் 20-க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சென்னை:

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரநிதிகளிடம் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று மாலை முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளார்.

இந்த சூழலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் வரும் 20 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேஎண்டும் சுற்றறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றி இந்த சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com