பொங்கலுக்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- ஜிகே வாசன் கோரிக்கை

பொங்கலுக்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜிகே வாசன்
ஜிகே வாசன்
Published on

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு கடலோர காவல் படையைக் கொண்டு முழு பாதுகாப்பு கொடுப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நேற்று முன்தினம் நள்ளிரவில் வங்கக் கடலில், மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, சிறைப் பிடித்துச் சென்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அதற்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் சுமார் 40 பேரை மீட்கவும், படகுகளை திரும்ப பெறவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய- இலங்கை நட்புறவு நீடிக்க வேண்டுமென்றால் தமிழக மீனவர்களின் மீன் பிடித் தொழிலுக்கு இலங்கை அரசால் இனி எப்பிரச்சினையும் வரக்கூடாது என்பதை இந்திய அரசு இலங்கை அரசிடம் அழுத்தமாக தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு விரைவாக இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com