கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசுமாடு- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

திருச்சிற்றம்பலம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டபோது எடுத்தபடம்.
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டபோது எடுத்தபடம்.
Published on

திருச்சிற்றம்பலம்:

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள அம்மையாண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். விவசாயி. இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருடைய வீட்டின் பின்புறம் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டது.

இதுகுறித்து பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீலகண்டன், சரவணமூர்த்தி, அருண், பாலமுருகன் ஆகியோர் 1 மணி நேரம் போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர். பசுமாட்டை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்களை அம்மையாண்டி கிராம மக்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com