

சென்னை, அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
கட்டிடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கட்டிட வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிடத்தில் உள்ள கணினி விற்பனை மையத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து, மீட்புப் பணிகளை சாலையில் செல்வோர் நின்று பார்த்து வருவதால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...சட்டசபையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கருணாநிதி படம் திறப்பு விழா