புதுக்கோட்டை அருகே சிம்னி விளக்கு சரிந்து விழுந்து கணவன்-மனைவி பலி

புதுக்கோட்டை அருகே சிம்னி விளக்கு சரிந்து விழுந்து கணவன், மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து
தீ விபத்து
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கென்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 30). இவர் மழையூரில் மளிகை கடை நடத்தி வந்தார். வழக்கம்போல் நேற்று முன் தினம் கடைக்கு சென்றவர் வியாபாரத்தை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பினர்.

பின்னர் மனைவி ரெஜினா பேகம் (25) மற்றும் குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். வெளிச்சத்திற்காக அருகில் சிமினி விளக்கை ஏற்றி வைத்திருந்தனர். அப்போது கைபட்டதில் எதிர்பாராத விதமாக சிமினி விளக்கு சரிந்து விழுந்து அதி லிருந்த கொட்டிய மண்எண்ணையால் குபீரென்று தீப்பற்றிக் கொண்டது.

இதில் முதலில் சம்சுதீனின் மனைவி ரெஜினாபேகம் உடையில் தீப்பிடித்து வேக மாக பரவியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவர் எழுந்து அலறினார். அவரை காப்பாற்ற போராடிய சம் சுதீனின் உடலிலும் தீயானது பரவியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப் போது இருவரும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். உடனடியாக அவர் களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ரெஜினாபேகம் (25) நேற்று இறந்தார். இன்று காலை சம்சுதீனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com