

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவின் கணவரும், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதியுமான சங்கர் பூலாப்பட்டி ஏரி வழியாக சென்றார். அப்போது ஏரியில் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்துள்ளார்.
அப்போது லாரி டிரைவர் குண்டுகல்லூரை சேர்ந்த பெரிச்சி என்பவர் ஊராட்சி மன்ற தலைவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதுடன் அவரிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பெரிச்சியை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.