தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு

கட்சி நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுவதாக தி.மு.க. தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
திமுக
திமுக
Published on

சென்னை:

தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டங்கள் கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு என 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

அதன்படி, திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி (தனி) தொகுதிகளும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி) தொகுதிகளும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளும் இடம்பெறுகின்றன.

மேலும், 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளராக ஆவடி சா.மு.நாசரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜனும், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக எம்.பூபதியும் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com