தர்மபுரியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தர்மபுரியில் வேளாண் திருத்த சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி கைகளில் பதாகைகளை ஏந்தியபடி தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி பெரியார் சிலை முன்பு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று திரண்டனர். அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி கைகளில் பதாகைகளை ஏந்தியபடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு சென்று அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com