

தலைநகர் டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் வீட்டின் 3-வது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை அணைத்தனர்.
ஆனால், தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னர் வீட்டின் 3-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...எந்த தேர்தலிலும் காங்கிரசால் வெற்றி பெற முடியாது: மந்திரி ஈசுவரப்பா