ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்

ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் மகள் திடீரென பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரைச் சேர்ந்தவர், தாமோதர்தாஸ் சார்தா. இவரது மனைவி சிறிது காலத்துக்கு முன்பு இறந்துவிட்டார். 3 மகள்கள் உள்ளனர். மூன்றாவது மகள் சந்திரா சார்தா.

73 வயதாகும் தாமோதர்தாஸ், கொரோனா பாதிப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மயானத்தில் தாமோதர்தாசின் உடலை எரித்தபோது, அவரது இளைய மகள் சந்திரா, திடீரென சிதை நெருப்பில் பாய்ந்துவிட்டார். அவரை பிறர் பிடித்து இழுத்து காப்பாற்றிவிட்டாலும், 70 சதவீத தீக்காயங்கள் அடைந்தார்.

முதலில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சந்திரா, பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜோத்பூர் நகர ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com