பெண்களுக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி மையம்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண்மையை போற்றும் வகையில் மகளிரால், மகளிருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மகளிரால், மகளிருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மகளிரால், மகளிருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

மதுரை:

உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண்மையை போற்றும் வகையில் மகளிரால், மகளிருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த பெண்களுக்கு செவிலியர்கள், பெண் டாக்டர்கள் ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்து கொரோனா தடுப்பூசியை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியை டீன் சங்குமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மருத்துவ துணை இருப்பிட அதிகாரி முத்துசெல்வி, செவிலிய கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கென பிரத்தியேகமாக இந்த கொரோனா தடுப்பூசி மையம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அந்த மையத்தில் பெண்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனவும், தினமும் அந்த மையத்தில் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் டீன் சங்குமணி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com