பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 57 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி- முதலமைச்சர்
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அரியலூர் தா.பழூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ரவி, செங்கல்பட்டு பாலூர் உதவி ஆய்வாளர் சிவசங்கரன், சென்னை குன்றத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டிமுனி, மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவு காவலர் அருண்காந்தி, புனித தோமையர்மலை ஆயுதப்படை பிரிவு பெண் காவலர் சத்தியலட்சுமி, விமான நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு.
தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2-ம் அணி பெண் உதவி ஆய்வாளர் துர்கா, ஆவடி சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தின் வாத்தியக்குழு பிரிவு காவலர் அருள்தாஸ், கோவை குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன், தருமபுரி மகேந்திரமங்கலம் இரண்டாம் நிலைக் காவலர் வெங்கடராமன், திண்டுக்கல் தெற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் அருணாச்சலம், பழனி தலைமைக் காவலர் தங்கவேலு.
கோபிசெட்டிபாளையம் உதவி ஆய்வாளர் பழனி, சங்கராபுரம் சிறப்பு உதவி ஆய்வாளர் இளையாபிள்ளை, ஊத்தங்கரை தலைமைக் காவலர் ராஜேந்திரன், நாமக்கல் மாவட்டம் வேலூர் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் குழந்தை வேல், பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் பெண் தலைமைக் காவலர் சாந்தி, புதுக்கோட்டை காவல் கட்டுப்பாட்டு அறை தலைமைக் காவலர் மாரிமுத்து.
சேலம் தொளசம்பட்டி தலைமைக் காவலர் கனிபிர சாத், அனைத்து மகளிர் பெண் தலைமைக் காவலர் வனிதா, சிவகங்கை ஆயுதப்படை தலைமைக் காவலர் பாலகுரு, தென்காசி சொக்கம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன்; புளியரை சிறப்பு உதவி ஆய்வாளர் வேலையா, ஆயுதப்படை தலைமைக் காவலர் கருணாகரன், தேனி தேவாரம் தலைமைக் காவலர் வெற்றிச்செல்வன், சின்னமனூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சோமு, திருவண்ணாமலை சாத்தனூர் முதல் நிலைக் காவலர் கவிதா, திருவாரூர் களப்பால் காவலர் முருகேசன், கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் மூர்த்தி, திருச்சி காவல் கண்காணிப்பாளருக்குப் பாதுகாவலர் முத்துகுமார், திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன்.
திருப்பூர் திருமுருகன்பூண்டி உதவி ஆய்வாளர் விக்டர், திருவள்ளூர் சோழவரம் சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி, வேலூர் சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் அண்ணாதுரை, விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு தலைமைக் காவலர் சிவக்குமார், ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அணி காவலர் முத்தையா ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
அரியலூர் மாவட்டம், வெங்கனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த மதியழகன், சென்னை தலைமைச் செயலக சுற்றுக்காவல் பிரிவு உதவி ஆய்வாளர் பிரதீஷ், சென்னை ஆயுதப்படை பிரிவு காவலர் ராம்கி, சேலையூர் உதவி ஆய்வாளர் தேவராஜ்; ஆயுதப்படை, முதலாம் அணி பெண் காவலர் பவித்ரா.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி காவலர் இளங்கோவன், 3-ம் அணி காவலர் மருதுபாண்டி, 13-ம் அணி காவலர் தானேஷ், கடலூர் முத்தாண்டிக்குப்பம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானசேகரன், தருமபுரி ஆயுதப்படைப் பிரிவு காவலர் செந்தில், கிருஷ்ணகிரி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-ம் அணி காவலர் ரவிவர்மன், மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-ம் அணி பெண் காவலர் கார்த்தியாயினி, சிலைமான் தலைமைக் காவலர் செல்வம், சேலம் அம்மாபேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல், திருவிடைமருதூர் காவலர் மோசஸ் மோகன்ராஜ், தேனி முதல் நிலை காவலர் முருகன், திருநெல்வேலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-ம் அணி (மணிமுத்தாறு) காவலர் அசோக்குமார்.
திருச்சி பாலக்கரை சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் திருப்பாலைவனம் காவலர் அண்ணாதுரை, விருதுநகர் மம்சாபுரம் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் மிகுந்த வேதனை அடைந்தேன்.
உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

