சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
முதல்வர் பழனிசாமி.
முதல்வர் பழனிசாமி.
Published on

சென்னை:

சென்னை தலைமை செயலத்தில் நாளை காலை 9.15 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்த நிலையில் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே உன உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனுதாக்கல் செய்திருந்தது.

விசாரணையில், ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு தரப்பில் அனுமதி அளிப்பதாக மத்திய அரசின் வழக்கறிஞா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com