

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது
2016-ம் ஆண்டு அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பில் உறுதியானது. ஆனால் அந்த
முடிவில் இருந்த சில நடைமுறை சிக்கலால் இழுபறி நிலவியது.
இறுதியில்
கடந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து
வெளியேறியது. ஆனாலும், ஐரோப்பிய யூனியனுடன் இங்கிலாந்தின் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது.
இந்த
பிரச்சனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்வு எட்டப்பட்டது. இதன்
மூலம் ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்
ஏற்பட்டு சட்டமாக்கப்பட்டது.
இதற்கிடையில்,
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் கொள்கையில் மிகவும் உறுதியாக
இருந்தவர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இவர் பழமைவாத கட்சியை
சேர்ந்தவர்.
இந்நிலையில், தற்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து முழுவதும் விலகியுள்ள நிலையில் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டன்லி ஜான்சன் பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.
தான் ஐரோப்பிய யூனியன் நாடான பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பித்தது தொடர்பாக 80 வயது நிரம்பிய ஸ்டன்லி ஜான்சன் கூறியதாவது:-
இது பிரெஞ்சு குடிமகனாவதற்காக செய்யப்பட்டது அல்ல. இது ஏற்கனவே நாம் யார் என்பதை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை.
எனது தாய் பிரான்சில் பிறந்தவர். நான் எப்போதும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்தவன் தான்.
என தெரிவித்துள்ளார்.