பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

பா.ஜ.க. எம்.பி. பாபுல் சுப்ரியோ மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.
பாபுல் சுப்ரியோ
பாபுல் சுப்ரியோ
Published on

புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், குட் பை. நான் எந்த அரசியல் கட்சிக்கும் செல்லவில்லை. சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரைவில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் பாபுல் சுப்ரியோ விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com