மானபங்க வழக்கு- பெண்களின் துணிகளை துவைக்க வாலிபருக்கு உத்தரவு

குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீல் சம்பந்தப்பட்டவர் குறைந்த வயதுடையவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார்.
கோர்ட் தீர்ப்பு
கோர்ட் தீர்ப்பு
Published on

பீகார் மாநிலம் மதுன்பானியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் ஏப்ரல் மாதம் நடந்தது. இதுவரை அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீல் சம்பந்தப்பட்டவர் குறைந்த வயதுடையவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதி ஐநாஷ்குமார் கூறும்போது, ‘இளம்வயது என்பதால் குற்றம் செய்ய அனுமதிக்க முடியாது. ஆனாலும் அவருடைய வயதை கருதி ஜாமீனில் விடுதலை செய்கிறோம். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் அவர் 6 மாதத்துக்கு துவைத்து அயர்ன் செய்து வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அந்த வாலிபர் சலவை தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...கொரோனாவுக்கு பிந்தைய மேலாண்மை- விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com