பேரிகையில் கூலித்தொழிலாளி கொலை- வாலிபர் கைது

பேரிகையில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை பிராமண தெருவை சேர்ந்தவர் யாகூப் (வயது 48.), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 21-ந்தேதி இரவு, பேரிகை ரிங்ரோடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் யாகூப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் யாகூப் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் பேரிகை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது யாகூப் மற்றும் பேரிகை காமராஜ் நகரை சேர்ந்த நரசிம்மன் (20) ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது.

இதையடுத்து நரசிம்மனை நேற்று போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மது அருந்தியபோது, தகராறு ஏற்பட்டதும், நாசிம்மன், யாகூப்பை தாக்கியதும் இதில் யாகூப் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பேரிகை போலீசார் நேற்று நரசிம்மனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com