கைது
செய்திகள்
வத்தலக்குண்டு அருகே 2 பேர் கைது
வத்தலக்குண்டு அருகே 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு மர்மநபர்கள் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் வத்தலக்குண்டு அருகே உத்தப்பநாயக்கனூர் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (வயது 31), யோகேஷ் (19) ஆகிய 2 பேர் தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

