இலங்கையில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்
கனமழை
கனமழை
Published on

கொழும்பு:

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம்.

இந்த ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெள்ள நீர் வடிந்து வருவதால் பாதிப்பு அடைந்த பகுதிகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com