நடிகர் ரஜினிகாந்தின் முடிவை மனதார வரவேற்கிறேன் - அர்ஜுன மூர்த்தி

அரசியலுக்கு வர முடியவில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் முடிவை மனதார வரவேற்கிறேன் என்று அர்ஜூன மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் - அர்ஜூன் மூர்த்தி
ரஜினிகாந்த் - அர்ஜூன் மூர்த்தி
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.அதில் அர்ஜூன மூர்த்திக்கு தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் முடிவை மனதார வரவேற்கிறேன் என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அர்ஜூன மூர்த்தி அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"ரஜினியின் மனம் எவ்வளவு கடுமையான உளைச்சலில் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவரது இந்த முடிவை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com