அல்லிநகரம் அருகே மது விற்ற 12 பேர் கைது

அல்லிநகரம் அருகே மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அல்லிநகரம்:

தேனி அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்றதாக லட்சுமிபுரத்தை சேர்ந்த வேல்ராஜ் (வயது 40), அல்லிநகரத்தை சேர்ந்த பால்பாண்டி (34), வீரப்பன் (30), கைலாசபட்டி கண்ணன் (37), வடபுதுப்பட்டி மூக்கன் (65), தாமரைக்குளம் முத்துப்பெருமாள் (30), பெரியகுளம் தினேஷ்குமார் (30), செல்வகுமார் (25) உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் புதுக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டில்களை கொண்டு சென்ற நெல்லுகுத்தி புளியமரம் தெருவை சேர்ந்த சிவாஜி (24), நாட்டாண்மை அழகிரி தெருவை சேர்ந்த அரசன் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 119 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com