விவசாய கடன் ரத்து: ஏ.சி.சண்முகம் பாராட்டு

ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்
Published on

சென்னை:

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றிருந்த ரூ.12,110 கோடி விவசாய கடனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்துள்ளார்.

இதன் மூலம் இந்த அரசு மக்கள் குறைதீர்க்கும் அரசு என்பதை செயலில் காட்டி உள்ளது. இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com