பழமைவாய்ந்த சிவன் கோவிலில் 8 சிலைகளை காணவில்லை- போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் இரணியூரில் பழமைவாய்ந்த சிவன் கோவிலில் 8 சிலைகள் காணாமல் போயிருப்பதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

சென்னை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூரில் பழமை வாய்ந்த ஆட்கொண்ட நாதர் சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் செயல் அலுவலராக இருந்து வரும் சுமதி 1948-ம் ஆண்டு சொத்து பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது கோவிலில் இருந்த சோமஸ்கந்தர், ஸ்கந்தர், பிரியா விடை அம்மன், தனி அம்பாள், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, நித்திய உற்சவ சுவாமி, நித்திய உற்சவ அம்பாள் ஆகிய பழமையான 8 சிலைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி வேலிடம் புகார் அளித்தார். இந்த புகார் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்பேரில் கூடுதல் டி.ஜி.பி. அபய் குமார் சிங், ஐ.ஜி. கணேசமூர்த்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com