பீகாரில் தொடரும் சோகம் - கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி

பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளக்சாராயம் குடித்து 25க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது. 

போதை அதிகமாக சாராயத்தில் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிடுகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரின் கண்டி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com