70-வது நினைவுநாள் - படேலுக்கு மோடி நினைவஞ்சலி

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேலின் 70-வது நினைவுதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நினைவஞ்சலி செலுத்தினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல் ஆவார். இவர் நமது நாட்டின் முதல் துணைப்பிரதமர். நேற்று படேலின் 70-வது நினைவுதினம்.

இதையொட்டி இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவஞ்சலி செலுத்தினார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஒரு வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர் இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேல். அவர் நினைவு தினத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் காட்டிய பாதை, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாக்க நம்மை எப்போதும் ஊக்குவிக்கும்” என கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com