தமிழ்புத்தாண்டு - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #TamilNewYear
தமிழ்புத்தாண்டு - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து வருமாறு:-

திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழனென்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா!

தரணி யெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றை கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #TamilNewYear

X

Maalai Malar
www.maalaimalar.com